Published : 13 Jan 2021 01:51 PM
Last Updated : 13 Jan 2021 01:51 PM

தெலங்கானா, அசாமில் வருமான வரித்துறை சோதனை

தெலங்கானா, அசாமில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

போலியான துணை ஒப்பந்ததாரர்கள், போலி நிறுவனங்கள் மற்றும் போலி ரசீதுகள் ஆகியவற்றின் மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்தப் புகார்களின் மீது செய்யப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக, 2021 ஜனவரி 7 அன்று தேடுதல் மற்றும் ஆய்வு நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொண்டது.

தெலங்கானாவில் உள்ள ஒரு முன்னணி சிவில் ஒப்பந்ததாரர் தொடர்புடைய இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள 19 இடங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போலி ரசீதுகளின் மூலம் பெரிய அளவில் பணத்தை கையாளும் தனிநபர்கள் மீதும் தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அசாமில் சோதனை

அசாமில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தொடர்புடைய வழக்குகளில் 2021 ஜனவரி 8 அன்று தேடுதல் மற்றும் ஆய்வு நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொண்டது.

அசாமில் உள்ள கவுகாத்தி, நல்பாரி மற்றும் திப்ருகரில் உள்ள 29 இடங்களில் தேடுதல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தனிப்பட்ட முறையிலும் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் மற்றும் மருந்தகங்களின் மூலமும் தங்களது வருமானத்தை குறைத்து காட்டியதாக இவர்களின் மீது புகார்கள் வந்திருந்தன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x