Published : 11 Jan 2021 03:35 PM
Last Updated : 11 Jan 2021 03:35 PM

சாலையோர வியாபாரிகளுக்கு நிதியுதவி திட்டம்: 12.7 லட்சம் பேருக்கு கடன்கள்

சாலையோர வியாபாரிகள் பயனடைய பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் இதுவரை 12.7 லட்சம் பேருக்கு கடன்கள் வழங்கப்பட்டன.

கோவிட்-19 நடவடிக்கையாக, முதல் கட்ட முடக்கம் முடிந்த பிறகு, கொவிட் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண மாற்றியமைக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்ட செயலி தொடங்கப்பட்டது. இதன் மூலம் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கொவிட் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டன. தீர்வு விகிதம் 87 சதவீதம் ஆகும்.

* கடந்த 2014-2021ம் ஆண்டு முதல் நகர்ப்புற வளர்ச்சியில் செய்யப்பட்ட மொத்த முதலீடு 627 சதவீதம் அதிகரிப்பு.

* கோவிட் நெருக்கடிகளை சமாளிக்க ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் உதவியாக இருந்தன. 50க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் நகரங்கள் கோவிட்-19 கட்டுப்பாட்டு மையங்களாக மாற்றப்பட்டன.

* கோவிட் முடக்க காலத்தில், பொது சுகாதாரத்தை மேம்படுத்த அம்ருத் திட்டம் உதவியது. முடக்கம் தொடங்கியதிலிருந்து 15 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகளும், 9 லட்சம் கழிவுநீர் குழாய் இணைப்புகளும் வழங்கப்பட்டன.

* 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பயனடைய பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு, 7 சதவீத வட்டி மானியத்தில் அவர்களுக்கு கடன் வசதி செய்து கொடுக்கப்பட்டது. கடனை முறையாக செலுத்துபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 டிஜிட்டல் பண பரிமாற்றம் மூலம் திருப்பிச் செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் இதுவரை 33.6 லட்சம் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 17.3 லட்சம் கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12.7 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டன.

* 66.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தனி கழிவறைகள் கட்டப்பட்டன.

* 6.2 லட்சம் பொது கழிவறைகள் கட்டப்பட்டன.

* தற்போது வரை 1,389 நகரங்கள் 2ம் ரக திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரங்களாகவும், 489 நகரங்கள் முதல் ரக திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரங்களாகவும் சான்றளிக்கப்பட்டன.

* பொது இடங்களில் உள்ள கழிப்பிடங்களை, மக்கள் எளிதில் கண்டறிய, அவை கூகுள் மேப்பி-ல் இணைக்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.

* தற்போது வரை 2,900க்கும் மேற்பட்ட நகரங்களில் 60,000க்கும் மேற்பட்ட கழிவறைகள் கூகுள் மேப்பில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் அதிக கழிவறைகள் இணைக்கப்பட்டு வருகின்றன.

* தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம். இது வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, 12 லட்சம் பேருக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

• மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், குஜராத்தில் ராஜ்கோட், தமிழகத்தின் சென்னை, ஜார்கண்டில் ராஞ்சி, திரிபுராவில் அகர்தலா, உத்தரப் பிரதேசத்தில் லக்னோ ஆகிய இடங்களில் சிறு வீடுகள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

• பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ்(நகர்ப்புறம்) இதுவரை 1.09 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x