Published : 09 Jan 2021 07:39 PM
Last Updated : 09 Jan 2021 07:39 PM

தங்க நாற்கர ரயில்பாதைத் திட்டம்: ரயில்களின் வேகம் 130 கிலோ மீட்டராக உயர்வு

தங்க நாற்கர ரயில்பாதைத் திட்டத்தில் 1612 கிலோமீட்டர் ரயில் பாதையில் 1280 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்களின் வேகத்தை 130 கிலோ மீட்டராக இந்திய ரயில்வே அதிகரித்துள்ளது.

சிக்னல் பணிகள் நடைபெற்று வரும் விஜயவாடா- துவ்வடா ரயில் பாதை தவிர்த்து தெற்கு மத்திய ரயில்வேயின் தங்க நாற்கர ரயில் பாதை முழுவதையும் இது உள்ளடக்கியுள்ளது.

ரயில் பாதையை வலிமையாக்கும் முறையான திட்டங்கள், உள்கட்டமைப்பை மேம்படுத்தும்‌ நடவடிக்கைகளின் வாயிலாக ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கனமான தண்டவாளங்கள், 260 மீட்டர் அளவிலான ரயில் பலகங்கள் அமைத்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

கோவிட் பெருந்தொற்று காலத்திலும் உள்கட்டமைப்பு, புதுமை, இணைப்புகளின் திறன், ஆகியவற்றில் இந்திய ரயில்வே அபரிமித வளர்ச்சியை சந்தித்துள்ளது. கோவிட் தொற்றினால் ஏற்பட்ட சவால்களை எதிர்கால வளர்ச்சி மற்றும் பயணிகளுக்கு அடுத்தகட்ட பயண அனுபவத்தை வழங்கும் வாய்ப்பாக ரயில்வே துறை மாற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x