Published : 07 Jan 2021 11:35 AM
Last Updated : 07 Jan 2021 11:35 AM

காரீப் நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட 26.18 சதவீதம் அதிகம்

தமிழகம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் காரீப் நெல் கொள்முதல் சுமுகமாக நடக்கிறது.

* கடந்த 5ம் தேதி வரை 513.19 லட்சம் மெட்ரிக் டன்களுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டதைவிட 26.18 சதவீதம் அதிகம்.

* 66.48 லட்சம் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.96,891.46 கோடி பெற்றுள்ளனர்.

* 51.66 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* கடந்த 5ம் தேதி வரை 274149.62 மெட்ரிக் டன் பாசிப் பயறு, உளுந்து, நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகியவை ரூ.1,466.64 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

* 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் ரூ.52.40 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x