

இந்தியாவில் ஆன்லைன் ரியல் எஸ்டேட் துறையில் முன்னிலை வகித்து வரும் ஹவுசிங்.காம் நிறுவனமும் 11,500-க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பான கிரெடாய் அமைப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
3 ஆண்டுக்கான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், ஹவுசிங்.காம் நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அறிந்து அதைப் பூர்த்தி செய்ய வழியேற்படும்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாயும், இணையதள ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுசிங்.காம் நிறுவனமும் ஒன்றிணைவது ரியல் எஸ்டேட் துறையில் முதன் முறையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் அணுகு முறையில் இந்த ஒப்பந்தம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஹவுசிங்.காம் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி ஜசன் கோத்தாரி தெரிவித்தார்.
இத்துடன் கிரெடாய் தேசிய அளவில் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஹவுசிங்.காம் நிறுவனம் தீவிர மாக செயலாற்ற ஒப்பந்தம் வழியேற்படுத்தியுள்ளது.