

நாட்டின் ஒட்டுமொத்த விற்பனை விலை அடிப்படையிலான பண வீக்கம் தொடர்ந்து 11 மாதங்களாக குறைந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் மைனஸ் 4.54 சதவீதமாக இருந்தது. இது முந்தைய மாதமான ஆகஸ்டில் மைனஸ் 4.95 சதவீதமாக இருந்தது.
பணவீக்கம் தொடர்ந்து மைனஸ் நிலையில் குறைந்திருந்தாலும் வெங்காயம், பருப்பு ஆகியவற்றின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
2014-ம் ஆண்டு செப்டம்பரில் பணவீக்கம் 2.38 சதவீதமாக இருந்தது. இந்த வார தொடக்கத்தில் வெளியான நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் 4.41 சதவீதமாக உள்ளது. இது முன்பு 3.74 சதவீதமாக இருந்தது.
ஒட்டுமொத்த விற்பனை விலை அடிப்படையிலான (டபிள்யூபிஐ) பணவீக்கமும், நுகர்வோர் விலை அடிப்படையிலான (சிபிஐ) பண வீக்கமும் செப்டம்பரில் குறைந்து பெரும் நெருக்குதலை ஏற்படுத்தி யுள்ளது. வெங்காயத்தின் விலை முந்தைய மாதத்தில் (ஆகஸ்ட்) 65.29 சதவீதமாக இருந்தது செப்டம்பரில் 113.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல பருப்புகளின் விலை 36.40 சதவீதத்திலிருந்து 38.56 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கோதுமை விலையும் 2.05 சதவீதத்திலிருந்து 3.34 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பொதுவாக உணவுப் பொருள் களைப் பொருத்தமட்டில் ஆகஸ்டில் 1.13 சதவீதமாக இருந்தது செப்டம் பரில் 0.69 சதவீதமாக சரிந்துள்ளது.
அதேசமயம் பதப்படுத்தாத உணவுப் பொருள்களின் பணவீக்கம் 0.69 சதவீதத்திலிருந்து 2.61 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் எண்ணெய் வித்துகளின் விலை அதிகரித்ததே.
புரதம் நிறைந்த உணவுப் பொருள்களான பால், முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலை சற்று உயர்ந்தே இருந்தது. ஆண்டுக்காண்டு கணக்கீட்டின் அடிப்படையில் பால் விலை 2.16 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலை 2.02 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. உருளை உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட் டுள்ளது.
ஒட்டுமொத்த விற்பனை விலை அட்டவணையில் உற்பத்திப் பொருள்களின் பங்கு 65 சதவீத மாக உள்ளது. இத்தகைய பொருள் களின் விலை 1.73 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இது 1.92 சதவீதமாக இருந்தது.