

44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக ஒருங்கிணைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவ தாக தொழிலாளர் துறை இணை யமைச்சர் பண்டாரு தத்தேரேயா நேற்று தெரிவித்துள்ளார்.
“நிறுவனங்களுக்கும் தொழிலா ளர்களுக்கும் ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு இத்தகைய சீர்திருத்தங்களை செய்வதுதான் இலக்கு எனவும், இந்த சீர்திருத்தங் களால் தொழிலாளர் உரிமை பறிக்கப்படாது” என்றும் மத்திய இணையமைச்சர் கூறினார்.
குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948 ன்படி, ஒரு நாளைக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.160 என்கிற ஊதிய வரம்பை அதிகரிக்க அந்த சட்டத்தை மறு ஆய்வு செய்வதாக மத்திய கூறி வருகிறது. இதுகுறித்து மத்திய இணையமைச்சர் கூறுகையில் “குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க இருக்கிறோம் விரைவில் இது சட்டமாக மாறும். நாங்கள் ஏற்கனவே அனைத்து மாநிலங்களிடமும் பேசியுள்ளோம். ஒவ்வொரு மாநிலமும் இதை நடைமுறைப்படுத்த உள்ளது” என்றும் கூறினார்.