Published : 05 Jan 2021 07:35 AM
Last Updated : 05 Jan 2021 07:35 AM

பொருளாதாரம் விரைவான மீட்சி அடைவதற்கு டிசம்பர் ஜிஎஸ்டி வரி வசூலே சான்று: மத்திய நிதித் துறை செயலர் கருத்து

புதுடெல்லி

கரோனா வைரஸ் ஊரடங்கு விலக்கலுக்குப் பிறகு பொருளாதாரம் விரைவாக மீட்சியடைந்து வருகிறது. டிசம்பர் மாதத்தில் வசூலான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இதற்கு சிறந்த சான்று என்று மத்திய நிதித் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்தார்.

டிசம்பர் மாதத்தில் மொத்தம் ரூ.1,15,174 கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. வரி வசூலில் சிறந்த நிர்வாக திறன் மற்றும் போலியான பில் மூலம் வரி ஏய்ப்பவர்களை கண்டுபிடித்ததன் மூலம் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக
விரைவாக நடந்து வருகிறது. வரிவசூலில் நேர்மையான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், இதை தவறாக பயன்படுத்தி வரி
ஏய்ப்பு செய்பவர்கள் குறைந்துள்ளனர். அதேபோல உள்ளீட்டு வரியை திரும்ப பெற விண்ணப்பிப்போரது விண்ணப்பங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின் றன. இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணமாக ஜிஎஸ்டி வசூல் டிசம்பர் மாதம் முன்னெப்போதும் இல்லாத அளவைக் காட்டிலும் அதிகம் வசூலாகியுள்ளது என்றுபாண்டே தெரிவித்தார்.

ஒரு சிலர் தங்களது வருமான வரி ரிட்டர்ன் படிவத்தில் தங்களது வருமானமாக சில லட்சங்களைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஜிஎஸ்டி படிவத்தில் அவர்களது விற்று முதல் (டர்ன் ஓவர்) சில கோடிகளாக குறிப்பிட்டுள்ளனர். இதேபோல சிலர் கோடிக்கணக்கில் பொருள்களை இறக்குமதி செய்துஅதற்கு ஜிஎஸ்டி செலுத்தாமல்ஏமாற்றுவதும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இதுபோன்று வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஜாமீனில் வெளி வர முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் வரிஏய்ப்பு செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x