Published : 04 Jan 2021 17:35 pm

Updated : 04 Jan 2021 17:35 pm

 

Published : 04 Jan 2021 05:35 PM
Last Updated : 04 Jan 2021 05:35 PM

தரம், உற்பத்தியை ஊக்குவிக்க தொழில்துறையினருக்கு நிகழ்ச்சிகள்: மத்திய தொழில் வர்த்தகத்துறை ஏற்பாடு

council-of-india
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

புதுடெல்லி

இந்திய தொழில் துறையில் தரம் மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இணையதளம் வாயிலாக தொழில்துறையினருக்கு மத்திய அரசு கருத்தரங்கு நடத்துகிறது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை (டிபிஐஐடி), இந்திய தரக் கவுன்சில், தேசிய உற்பத்தித் திறன் குழு, இந்திய தர நிர்ணய அமைப்பு மற்றும் தொழில் சபைகளுடன் இணைந்து, இந்திய தொழில் துறையில் தரம் மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் துறை சார்ந்த வலைதள கருத்தரங்கங்களை நடத்தவிருக்கின்றது.


உத்யோக் மன்தன் என்ற பெயரிலான இந்த மாரதான் இணைய கருத்தரங்கங்கள், இன்று தொடங்கி முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறும். ஜனவரி 6-ஆம் தேதி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பாளர்களுடன் உரையாடுவார்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறும் ஒவ்வொரு கருத்தரங்கங்களிலும் துறை சார்ந்த மற்றும் தொழில் வல்லுநர்களின் விவாதங்கள் நடைபெறும். இந்த கருத்தரங்கங்களை விருப்பமுள்ளவர்கள் யூடியூப்-இல் நேரலையாகக் காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உள்ளூர் பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் தற்சார்பு இந்தியா ஆகிய முன்முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த கருத்தரங்கங்களில் தரம் மற்றும் உற்பத்தி சார்ந்த சவால்களும், அவற்றை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

உயர்ந்த தரம், சிறந்த உற்பத்தி, வர்த்தகம் உள்ளிட்ட பிரிவுகளில் நாட்டிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்திய தொழில்துறையினர் தரம் மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!


மத்திய தொழில் வர்த்தகத்துறைபுதுடெல்லிதரம்உற்பத்திCouncil of India

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x