Published : 03 Jan 2021 02:16 PM
Last Updated : 03 Jan 2021 02:16 PM

பிரதமரின் விவசாயிகள் நல நிதி;  ரூ 1,10,000 கோடி விநியோகம்

புதுடெல்லி

பிரதமரின் விவசாயிகள் நல நிதியின் கீழ், ரூ 1,10,000 கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளுக்கு இது வரை வழங்கப்பட்டு, 10.59 கோடி விவசாயிகள் இதன் மூலம் பலனடைந்துள்ளனர்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் ஆண்டு இறுதி நிலவர அறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பொருளாதார தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், வேளாண் துறையில் எதுவும் செய்யப்படவில்லை. எனவே, விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சீர்திருத்தங்களை அரசு கொண்டு வந்திருக்கிறது.

2020-ஆம் ஆண்டில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் முக்கிய செயல்பாடுகள் :

* இத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஆறு மடங்கு உயர்த்தப்பட்டு 2020-21-ஆம் ஆண்டில் ரூ 1,34,399.77 கோடி ஆக இருந்தது. 2013-14-ஆம் ஆண்டில் வேளாண் துறைக்கான ஒதுக்கீடு வெறும் ரூ 21,933.50 கோடி மட்டுமே.

* 2015-16-ஆம் ஆண்டு ரூ 251.54 மில்லியன் டன்களாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2019-20-ஆம் வருடம் 296.65 மில்லியன் டன்களாக இது வரை இல்லாத வகையில் உயர்ந்தது.

* அதே போல், தோட்டக்கலை பொருட்களின் உற்பத்தியும் இது வரை இல்லாத அளவு 319.57 மில்லியன் மெட்ரிக் டன்களாக 2019-20-ஆம் ஆண்டு உயர்ந்தது.

* கரிப், ராபி மற்றும் இதர வணிகப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தியது. உற்பத்தி செலவை விட 50 சதவீதம் அதிகமாக கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் விலைகள் உயர்த்தப்பட்டன.

* பல்வேறு பயிர்களை விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் போது அவற்றுக்கு வழங்கப்படும் விலையோடு மட்டுமில்லாமல், கொள்முதல் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* பிரதமரின் விவசாயிகள் நல நிதியின் கீழ், ரூ 1,10,000 கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளுக்கு இது வரை வழங்கப்பட்டு, 10.59 கோடி விவசாயிகள் இதன் மூலம் பலனடைந்துள்ளனர்.

* வேளண் துறைக்கு கடன், விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள், நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், உரத்துக்கு வேப்பம் பூச்சு ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

* வேளாண் கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய நிதி வசதித் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 9 அன்று தொடங்கி வைத்தார்.

* இத்திட்டம், சமுதாய வேளாண்மையைக் கட்டமைக்கவும் அறுவடைக்குப் பிந்தைய வேளாண் கட்டமைப்புக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கடன் சங்கம், வேளாண் உற்பத்தி அமைப்புகள், வேளாண் தொழில்முனைவோர் ஆகிய தரப்பினருக்கு இது உதவும். இந்த வசதிகளின் மூலம் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களுக்குக் கூடுதலான மதிப்பைப் பெற முடியும்.

* 10,000 விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை அமைத்து ஊக்குவிப்பதற்கான திட்டம் ரூ 6,865 கோடி ஒதுக்கீட்டுடன் 2020 பிப்ரவரி 29 அன்று தொடங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x