ஜிஎஸ்டி இ-இன்வாய்ஸ்: 37,000 பேர்; 1680 லட்சம் ரசீதுகள்

ஜிஎஸ்டி இ-இன்வாய்ஸ்: 37,000 பேர்; 1680 லட்சம் ரசீதுகள்
Updated on
1 min read

ஜிஎஸ்டி இ-இன்வாய்ஸ் முறை 3 மாதங்களை நிறைவு செய்தது. 37,000 பேரால் 1680 லட்சம் ரசீதுகள் உருவாக்கப்பட்டுள்ளன

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்துவோர், இ-இன்வாய்ஸை (மின்-விலைப்பட்டியல்) தேசிய தகவல் மைய (என்ஐசி) இணையதளத்தில் உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ளது.

இந்த மூன்று மாதங்களில், 37,000 வரிசெலுத்துவோரால் 1680 லட்சம் ரசீதுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2020 டிசம்பர் மாதம் மட்டும் 603 லட்சம் மின்-விலைப்பட்டியல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை நவம்பரில் 589 லட்சமாக இருந்தது.

ஜிஎஸ்டி முறையின் கீழ், சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல இ-வே ரசீதுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் இ-இன்வாய்ஸ் முறையையும் அமல்படுத்த 35-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இன்வாய்ஸ் பதிவு இணையதளத்தில் (ஐஆர்பி) பதிவாகும் தகவல்கள், ஜிஎஸ்டி பொது இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளப்படும். இதன் மூலம் ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கு ஜிஎஸ்டிஆர்1 தாக்கல் எளிதாக இருக்கும். இந்த இ-வே மற்றும் இ-இன்வாய்ஸ்களை என்ஐசி இணையதளத்தில் உருவாக்கும் வசதி கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த இ-இன்வாய்ஸ் முறை, ஜிஎஸ்டி வரிமுறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்த நிதியாண்டில் ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படும்.

என்ஐசி இணையதளத்தில் இன்வாய்ஸ் பதிவு எண்கள் உருவாக்கும் முறை, தடையின்றி சுலபமாக இருப்பதாக, ஜிஎஸ்டி வரி செலுத்துவோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in