Last Updated : 14 Oct, 2015 10:37 AM

 

Published : 14 Oct 2015 10:37 AM
Last Updated : 14 Oct 2015 10:37 AM

வரி பிரச்சினைகளுக்கு தீர்ப்பாயம் சிறந்த தீர்வாகாது: சிபிடிடி தலைவர் தகவல்

வரி தொடர்பான பிரச்சினைகளுக்கு வரி தீர்ப்பாயத்தை அணுகுவது மட்டுமே சிறந்த தீர்வாக அமையாது என்று மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் (சிபிடிடி) தலைவர் அனிதா கபூர் கூறினார்.

டெல்லியில் நேற்று அசோசேம் ஏற்பாடு செய்திருந்த 12 வது சர்வதேச வரி விதிப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியது:

வரி விதிப்பு பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக தீர்ப்பாயத்தை அணுகுவதைக் காட்டிலும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று அவர் கூறினார். இந்தியாவில் சட்ட அமலாக்கம் மிகச் சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

பரஸ்பரம் புரிந்துகொள்ளுதல் அடிப்படையில் (எம்ஏபி) வரி தொடர்பான பிரச்சினைகளை அணுகினால் அது பயனளிக்கும். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்ப்பாயத்தை நாடுவது சிறந்த தீர்வாக இருக்காது. வரி விதிப்பு அதிகாரிகள் அவர்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனர். அதேபோல தீர்ப்பாயமும் மேலாண்மை பொருந்திய அமைப் பாகும். இரு பெரும் அமைப்புகள் ஒரு பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது.

இத்தகைய சூழலில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு எவ்விதம் நடுநிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

வோடபோன் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 20 ஆயிரம் கோடி வரி தொடர்பான விவகா ரத்தில் அரசும், தீர்ப்பாயமும் நடுநிலை யாளர்களை நியமித்து தீர்வு காண கேட்டுக் கொண்டுள்ளன. ஆனால் இதற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

அதேசமயம் கெய்ர்ன் விவகாரத்தில் தீர்ப்பாயத்துடன் இணைந்து செயல்பட அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ரூ. 10,247 கோடி வரி நிலுவை வழக்கில் விரைவில் சமரச அமைப்பாளர் நியமிக்கப்பட உள்ளார் என்று குறிப்பிட்டார்.

கருப்புப் பணத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கடுமையான சட்ட விதிமுறைகள் குறித்து குறிப்பிட்ட அனிதா கபூர், ஏற்கெனவே உள்ள சட்டங்கள் கடுமையாக இல்லை. இதனாலேயே கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர முடியவில்லை. இதன் காரணமாகத்தான் தற்போது கடுமையான விதிமுறையுடன் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கருப்புப் பணத்துக்கு எதிராக கடுமையான சட்டம் உள்ளது என்பது தெளிவாக தெரிந்த பிறகுதான் இதை ஒழிக்க முடியும். அந்த சட்டத்தின்கீழ் நடவடிக்கை கடுமையாகும்போதுதான் இதன் தீவிரம் உணரப்படும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளை தெளிவுபடுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சிபிடிடி-யின் பிரதான பணியாகும். சிறு குறைகள் இருப்பின் அதை தொழில்துறையினர் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

வரி வசூலிக்க வேண்டிய அளவுக்கு மீறி ஒருபோதும் வசூலிக்கப்போவதில்லை. அதே சமயம் எவ்வளவு வரி விதிக்க வேண்டும், வசூலிக்க வேண்டும் என விதிமுறை கூறுகிறதோ அதை வசூலிக்க சிபிடிடி கடமைப் பட்டுள்ளது என்று அனிதா கபூர் தெளிவுபடுத்தினார்.

வரி விதிகள் குறித்து தொழில்துறையினரும் வரித்துறை நிபுணர்களும் ஆலோசனைகளை அளிப்பதன் மூலம் வரி விதிகள் இன்னும் எளிமையானதாகக் கொண்டு வர முடியும் என்று முன் கூட்டியே வரி விதிப்பு ஆணை யத்தின் தலைவர் நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் கூறினார்.

வரி விதிப்பு சட்டங்களை உருவாக்குவதில் சில குறைகள் இருக்கலாம். இதில் சில புரிந்துகொள்ள முடியாமல் கூட இருக்கலாம். இந்த விதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று வழக்குரைஞர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண் டியிருக்கிறது.

ஆனால் ஆலோசனைகள் வழங்குமாறு குழு அழைப்பு விடுத்த போது வழக்குரைஞர் தரப்பி லிருந்து எவ்வித ஆலோ சனையும் வரவில்லை என்று சிர்புர்கர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x