உர விற்பனை: 9 மாதத்தில் 451.16 லட்சம் மெட்ரிக் டன்கள்

உர விற்பனை: 9 மாதத்தில் 451.16 லட்சம் மெட்ரிக் டன்கள்
Updated on
1 min read

2020 ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 15 வரையிலான மொத்த உர விற்பனை 451.16 லட்சம் மெட்ரிக் டன்களைத் தொட்டது.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக வரலாறு காணாத நடவடிக்கைகளை 2020-ஆம் ஆண்டு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் எடுத்தது. முக்கிய அம்சங்கள் வருமாறு:

ரூ.1512 கோடி மதிப்பிலான 15 அந்நிய நேரடி முதலீட்டு முன்மொழிதல்களுக்கு மருந்துகள் துறை 2020-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.

ரூ.7,211 கோடி மதிப்பிலான 11 அந்நிய நேரடி முதலீட்டு முன்மொழிதல்கள் மருந்துகள் துறையின் பரிசீலனையில் உள்ளன.

ரூ.15801.96 கோடியை ஊட்டச்சத்து சார்ந்த மானியமாகவும், ரூ. 53950.75 கோடியை உரங்களுக்கான மானியமாகவும் 2020-ஆம் வருடம் அரசு வழங்கியது.

2020 ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 15 வரையிலான மொத்த உர விற்பனை 451.16 லட்சம் மெட்ரிக் டன்களைத் தொட்டது.

ஆந்திரப்பிரதேசம், குஜராத், ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் நான்கு பெட்ரோ இரசாயன முதலீட்டு மண்டலக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ 7.63 இலட்சம் கோடி முதலீட்டை இவை ஈர்க்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in