Published : 31 Dec 2020 08:59 AM
Last Updated : 31 Dec 2020 08:59 AM

எத்தனால் வடிதிறனை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முதலாம் தலைமுறை எத்தனால் உற்பத்திக்காக, நாட்டில் எத்தனால் வடிதிறனை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்தது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாட்டில் சர்க்கரை உற்பத்தி 2010-11ம் ஆண்டு முதல் அளவுக்கு அதிகமாக உள்ளது. இனி வரும் ஆண்டுகளிலும், நாட்டில் சர்க்கரை உற்பத்தி கூடுதலாக இருக்கவே வாய்ப்புள்ளது.

அதனால் கூடுதல் கரும்பை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்துவதுதான் சரியான வழியாகும்.

2022ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 10% எத்தனாலை சேர்க்கவும், 2030ம் ஆண்டுக்குள் 20% எத்தனால் சேர்க்கவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தரமான எத்தானல் தயாரிப்பை அதிகரிப்பதற்காக, உணவு தானியங்களான அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம், கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, முதல் தலைமுறை எத்தனால் உற்பத்தி செய்வதை அரசு ஊக்குவிக்கிறது.

முதல் தலைமுறை எத்தனால் உற்பத்திக்கான வடிதிறனை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதற்காக புதிய இரட்டை உணவு தானிய வடிகட்டுதல் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும் ஏற்கனவே உள்ள கரும்புச்சாறு வடிகட்டுதல் மையங்கள், எத்தனால் தயாரிப்பு வடிகட்டுதல் மையங்களாக விரிவுபடுத்தப்படவுள்ளன. இதற்காக அதில் மூலக்கூறு சல்லடை நீரிழப்பு (எம்.எஸ்.டி.எச்) சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.

இத்திட்டத்துக்காக வங்கியில் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் கடன் பெறும் போது, 5 ஆண்டு காலத்துக்கு வட்டி மானியம் மற்றும் ஓராண்டு காலம் கழித்து கடனை செலுத்தும் சலுகை அல்லது வங்கி வசூலிக்கும் வட்டியில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அதை அரசு ஏற்கும். தயாரிக்கப்படும் எத்தனாலில் 75 சதவீதத்தை, எண்ணெய் நிறுவனங்களுக்கு சப்ளை செய்பவர்களுக்கு மட்டுமே இந்த வட்டி சலுகை கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x