

டெல்லியில் உள்ள 13 சுங்கச்சாவடிகளில், மின்காந்த அலைகள் அடையாள முறையை கடுமையாக செயல்படுத்துமாறு காற்றுத் தர ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
டெல்லிக்கு வரும் வர்த்தக வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசைக் கட்டுப்படுத்துவதற்காக தில்லியில் உள்ள 13 சுங்கச்சாவடிகளில் மின்காந்த அலைகள் அடையாள முறை செயல்படுத்தப்பட்டது.
டெல்லிக்கு வரும் 70 சதவீத வர்த்தக வாகனங்கள் இந்த 13 சுங்கச்சாவடிகளின் வழியாகத்தான் வருகின்றன.
2020 ஆகஸ்ட் 14-ஆம் தேதியிலிருந்து மின்காந்த அலைகள் அடையாள முறை இந்த 13 சுங்கச்சாவடிகளில் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்றும், மின்காந்த அலை அடையாள அட்டைகள் இல்லாத அல்லது அவற்றில் பணம் குறைவாக இருக்கும் வாகனங்களை அனுமதிப்பதாகவும் டெல்லி தேசிய தலைநகரப் பகுதி காற்றுத் தர ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள 13 சுங்கச்சாவடிகளில் மின்காந்த அலைகள் அடையாள முறையைக் கடுமையாக செயல்படுத்துமாறு காற்றுத் தர ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் அதிகரித்து வரும் மாசு அளவுகளைக் கருத்தில் கொண்டும் வர்த்தக வாகனங்கள் இவற்றிற்குப் பெரும் பங்காற்றுவதன் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.