தேசிய பங்குச் சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேற திட்டம்

தேசிய பங்குச் சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேற திட்டம்
Updated on
1 min read

இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தையான தேசிய பங்குச்சந் தையில் (என்எஸ்இ) இருந்து பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங் கள் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் வெளியேற திட்டமிட்டிருக் கிறார்கள்.

ஆக்டிஸ் (Actis) என்னும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு என்.எஸ்.இ.யில் முதலீடு செய்து ஒரு சதவீத பங்குகளை வாங்கியது. இந்த நிலையில் ஆக்டிஸ் உள்ளிட்ட பிற முதலீட்டாளர்கள் என்எஸ்இ ஐபிஓ வெளியிட சொல்லி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தன. இந்த ஐபிஓ மூலம் தங்களுடைய பங்குகளை விற்கவும் முடிவு செய்திருந்தன. ஆனால் ஐபிஓ வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் முதலீட்டாளர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இது குறித்து ஆக்டிஸ் நிறுவனத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, சந்தையில் நிலவும் வதந்திகளுக்கு பதில் கூற முடியாது என்று மறுத்துவிட்டது.

இது குறித்து பேசிய தேசிய பங்குச்சந்தையின் தகவல் தொடர்பு அதிகாரி, பங்குகளை விலக்கி கொள்வது என்பது முதலீட்டாளர்களின் முடிவு, இதில் எங்களுடைய பங்கு ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

எல்.ஐ.சி., எஸ்பிஐ, ஐஎப்சிஐ, டைகர் குளோபல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் என்.எஸ்.இ.யில் முதலீடு செய்திருக்கின்றன.

செபி விதிமுறைகள்படி பங்குச்சந்தை நிறுவனங்கள் பட்டியலிடப்படலாம். ஆனால் தங்களுடைய சந்தையில் பட்டியலிட முடியாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in