

இண்டர்குளோப் என்டர்பிரைஸஸ் நிறுவனத்தின் வாழ்நாள் இயக்குநர். இந்த நிறுவனம் விமான சேவை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளது.
1989-ல் விமான போக்குவரத்து துறையில் இறங்கினார். இந்த துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.
இண்டிகோ விமான போக்குவரத்து சேவையை வழங்கிவரும் இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பொறுப்புகளற்ற இயக்குநராகவும் உள்ளார்.
கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்.
இவரது நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு மூலம் ரூ.2,500 கோடி நிதி திரட்ட செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.
போர்ப்ஸ் வெளியிட்ட 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் 50 பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 38வது இடத்தில் உள்ளார்.