Published : 26 Dec 2020 09:28 AM
Last Updated : 26 Dec 2020 09:28 AM

அரசு குடியிருப்புகள், விடுதிகள், அரங்கங்களின் பதிவுகள்: இ-சம்பதா தளத்தின் கீழ் ஒருங்கிணைப்பு

இ-சம்பதா என்ற புதிய இணைதளம் மற்றும் கைபேசி செயலி மூலம் அரசுக் குடியிருப்புகள், விடுதிகள், அரங்கங்களின் முன்பதிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நிர்வாக நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காகவும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் மத்திய அரசின் எஸ்டேட்ஸ் இயக்குநரகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் இ-சம்பதா என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலியை உருவாக்க முடிவு செய்தது. இவற்றின் மூலம் ஒற்றைச் சாளர முறையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அரசு குடியிருப்புகள், அரசு அமைப்புகளுக்கு அலுவலக இடங்கள், சமூக நிகழ்ச்சிகளுக்கான அரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒரே நாடு, ஒரே அமைப்பு என்ற முறையை வழங்கும் முயற்சியாக மேற்கண்ட வசதிகளை வழங்கிய எஸ்டேட்ஸ் இயக்குநரகத்தின் 4 இணையதளங்கள் (gpra.nic.in, eawas.nic.in, estates.gov.in, holidayhomes.nic.in) மற்றும் இரண்டு செயலிகள் (m-Awas & m-Ashoka5) ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக www.esampada.mohua.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான செயலியையும் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தையும், செயலியையும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘எஸ்டேட் சர்வீஸ் சேவைகளை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, இது குறிப்பிடத்தக்க நடவடிக்கை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x