Published : 25 Dec 2020 12:55 PM
Last Updated : 25 Dec 2020 12:55 PM

அனைத்திந்திய வணிகத் தேர்வு: முதல் மூன்று இடங்களை தமிழகம் வென்றது

1,23,000 பேர் கலந்து கொண்ட அனைத்திந்திய வணிகத் தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களில், முதன்மையான மூன்று இடங்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வென்றுள்ளனர்.

அவர்களின் விபரம் வருமாறு:

1. எம். செல்வம் பெல் நிறுவனம், திருமயம், ஃபிட்டர் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

2. சிவரஞ்சன் ரவிச்சந்திரன், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், நெய்வேலி, எலக்ட்ரீசியன் பிரிவில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

3. கமலேஷ் குமார் ரவி, கனரக வாகனங்கள் நிறுவனம், சென்னை, ஃபிட்டர் பிரிவில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

110 - அனைத்திந்திய பயிற்சியாளர் தேர்வு முடிவுகளை மாண்புமிகு திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் வாயிலாக 2020 டிசம்பர் 28 அன்று வெளியிட மத்திய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

மேற்கண்ட நிறுவனங்களுடன், ஓஎன்ஜிசி சென்னை, ஐசிஎப் சென்னை, பெல் திருச்சிராப்பள்ளி, அசோக் லேலாண்ட் சென்னை மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை, திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் மண்டல இயக்குநரகத்தின் துணை இயக்குநர், பயிற்சி, டி வி ராஜசேகர் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x