ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்: நிதின் கட்கரி திட்டவட்டம்

ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்: நிதின் கட்கரி திட்டவட்டம்
Updated on
1 min read


நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் 2020 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

காணொலி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை என்ற காரணத்திற்காகவும், நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்புக்கு உதவுவதன் மூலமும் சாலைப் பணியாளர்களுக்கு இது பலனளிக்கும் என்றார்.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நவம்பரில் அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய மோட்டார் வாகன விதிகளில் இதற்காக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-இன் படி 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி முதல், வாகன உற்பத்தியாளர்கள் அல்லது முகவர்களால் விநியோகிக்கப்பட்ட பதிவு செய்யப்படும் அனைத்து புதிய நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

இதில் மேலும், போக்குவரத்து வாகனங்கள் ஃபாஸ்டேக் பொருத்தப்பட்ட பின்னரே பிட்னஸ் சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய அனுமதி வாகனங்கள் ஃபாஸ்டேக் பொருத்துவது 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in