

* பொதுத்துறை மற்றும் தனியார் துறை சர்க்கரை நிறுவனங்களின் கூட்டமைப்பான ஐஎஸ்எம்ஏ-வின் பொது மேலாளர். 2010 லிருந்து இந்த பொறுப்பு வகித்து வருகிறார்.
* கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தி, எத்தனால், துணை மின் உற்பத்தி சார்ந்த துறைகளில் மத்திய மாநில அரசுகளில் கொள்கை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
* மத்திய அரசின் சர்க்கரை துறை இயக்குநராக பணியாற்றியவர். பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் வெஜிடபிள் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியவர்.
* இந்திய ரயில்வே துறையின் கட்டுமான நிறுவனமான ஐஆர்சிஓஎன் மற்றும் கிழக்கு ரயில்வே டிவிஷனில் நிதி சார்ந்த பிரிவில் முதன்மை மேலாளராக பணியாற்றியுள்ளார்.
* செயில் நிறுவனத்தில் சந்தை பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
* டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை பொருளாதாரமும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொருளாதார பட்டமும் பெற்றவர்.
* பொது உரிமைகள், மனித உரிமைகள், சுற்றுச் சூழல் சார்ந்த விஷயங்களை கையாளுவதில் வல்லுனர்.