

கெய்ர்ன் எனர்ஜி பி.எல்.சி மற்றும் கெய்ர்ன் யுகே ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகியவை தொடர்ந்த வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை சட்ட நிபுணர்நிபுணர்கள் துணையுடன் ஆலோசனை செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2006-07ம் ஆண்டு பிரி்ட்டனைச் சேர்ந்த கெய்ன் நிறுவனம் தன்னுடைய பங்குகளை இந்தியாவில் உள்ள கெய்ன் நிறுவனத்துக்கு மாற்றியது. ஆனால், இந்த பங்குகளை மாற்றிய வகையில் முதலீட்டு ஆதாயத்தை கெய்ன் இந்தியா அடைந்துள்ளதாக்க கூறி அந்த நிறுவனத்துக்கு ரூ.10,247 கோடி வரிவிதித்து வருமானவரித்துறை.
ஆனால், இந்த வரியை செலுத்த கெய்ன் நிறுவனம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து வருமானவரி மேல்முறையீடு தீர்ப்பாயத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் கெய்ன் நிறுவனம் முறையீடு செய்தது. ஆனால், அந்த வழக்கில் கெய்ன் நிறுவனம் தோல்வி அடைந்தது.
இதனால் வேறு வழியின்றி, கடந்த 2011-ம் ஆண்டு கெய்ன் நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது பெரும்பான்மையான பங்குகளை, வர்த்தகத்தை வேதாந்தா நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. கெய்ன் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய வருமானவரித்துறை அனுமதிக்கவில்லை. மேலும், கெய்ன் இந்தியாவின் பங்குகளை முடக்கியும், அதன் ஈவுத்தொகையை முடக்கி வைத்தனர்.
இந்திய அரசின் செயலை எதிர்த்து, தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் கெய்ன் நிறுவனம் முறையீடு செய்தது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கெய்ன் நிறுவனத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.8ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
முதலீடுகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா-இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், மத்திய அரசுக்கு எதிராக கெய்ர்ன் எனர்ஜி பி.எல்.சி மற்றும் கெய்ர்ன் யுகே ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகியவை தொடர்ந்த வழக்கில் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பின் அனைத்து அம்சங்களையும், சட்ட நிபுணர் நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசு கவனமாக ஆய்வு செய்யவுள்ளது. இந்த ஆலோசனைக்குப் பின், சட்ட ரீதியான தீர்வுகள் உட்பட அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.