Published : 23 Dec 2020 08:48 AM
Last Updated : 23 Dec 2020 08:48 AM

ரயில்வே பார்சல்; டிஜிட்டல் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி: பியூஷ் கோயல் வலியுறுத்தல்

சிறு வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு முக்கியமாக விளங்கும் பார்சல் தொழிலின் வளர்ச்சி மீது ரயில்வே கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய ரயில்வே, தொழில் மற்றும் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

ரயில்வேயின் பார்சல் தொழில் குறித்த ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்திய பியூஷ் கோயல் இவ்வாறு கூறினார். ரயில்வே வாரியத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தனது பார்சல் சேவைகளுக்கு அதிக வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக ரயில்வே எடுத்துள்ளது. புதுமைகளை புகுத்துவதன் மூலம் பார்சல் வர்த்தகத்தை விரிவுபடுத்த ரயில்வே முடிவு எடுத்துள்ளது.

விவசாயிகள் ரயில் சேவை உள்ளிட்ட ரயில்வேயின் நடவடிக்கைகளை பாராட்டிய அமைச்சர், பார்சல் பெட்டிகளின் உற்பத்தியை பெருக்கவும், டிஜிட்டல் மூலம் கட்டணம் செலுத்தும் வசதிகளை வழங்கவும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x