

சரக்கு போக்குவரத்து வாடிக்கையாளர்களுக்கான புதிய கொள்கையை ரயில்வே வெளியிட்டது
சரக்கு போக்குவரத்து வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான புதிய கொள்கையை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், ப்ரீமியம் இன்டன்ட் என்னும் பிரிவின் கீழ் கோரிக்கை வைக்கும் வாடிக்கையாளருக்கு முன்னுரிமை அடிப்படையில் இரண்டு நாட்களுக்குள் ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படும். இது விதிகளுக்கு உட்பட்டது ஆகும்.
தனது பார்சல் சேவைகளுக்கு அதிக வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக ரயில்வே எடுத்துள்ளது. புதுமைகளை புகுத்துவதன் மூலம் பார்சல் வர்த்தகத்தை விரிவுபடுத்த ரயில்வே முடிவு எடுத்துள்ளது.