3 நாடுகளில் புதிய தொழிற்சாலை அமைக்க திட்டம்: ஹீரோ மோட்டோ கார்ப் அறிவிப்பு

3 நாடுகளில் புதிய தொழிற்சாலை அமைக்க திட்டம்: ஹீரோ மோட்டோ கார்ப் அறிவிப்பு
Updated on
1 min read

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் இந்த வருட இறுதிக்குள் அர்ஜெண்டினா, மெக்சிகோ, நைஜீரியா ஆகிய மூன்று நாடுகளில் புதிய தொழிற் சாலைகளை தொடங்க இருப் பதாக அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ரவி சூட் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விற்பனையை உலகச் சந்தையில் விரிவு படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த காலாண்டில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் 2.5 லட்சம் யூனிட் விற்பனையை கண்டுள்ளது. இது கடந்த காலாண்டை விட 25 சதவீதம் அதிகமாகும். கடந்த காலாண்டில் இந்நிறுவனம் 2 லட்சம் யூனிட் விற்பனை கண்டது.

அர்ஜெண்டினா, மெக்சிகோ, நைஜீரியா ஆகிய மூன்று நாடுகளில் தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம் ஒரு வருடத்திற்கு 20 லட்சம் இரு சக்கர வாகனங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் கொலம்பியாவில் உள்ள விலா ரிகா என்ற இடத்தில் தொழிற்சாலையில் புதிய வசதிகளுடன் உற்பத்தியை தொடங்கியிருக்கிறது. 7 கோடி டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலை, இந்தியா விற்கு வெளியே ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தால் முதன் முதலில் தொடங்கப்பட்டது.

மாதந்தோறும் 4,000 வாகனங்களை இந்த ஆலையின் மூலம் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறியுள்ளது.

மேலும் 50 நாடுகளில் விற்பனையை அதிகரிக்கவும் 20 இடங்களில் இருசக்கர வாகனங்களை அசெம்பிள் செய்யும் ஆலைகளை தொடங் கவும் திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு விற்பனையில் நீடித்த சரிவை கண்டு வருவதை பற்றி ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் அசோக் பாசினிடம் கேட்டபோது, “கடந்த 4 மாதங்களாக கிராமப்புறங்களில் விற்பனை அளவு அதிகரித்து உள்ளது. இந்த சரிவு படிப்படியாக குறைந்து விடும்” என்று தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in