

கடந்த ஆண்டு நவம்பரை ஒப்பிடுகையில் 2020 நவம்பரில் கச்சா எண்ணெய் உற்பத்தி 4.91 சதவீதமும் குறைந்துள்ளது.
இந்தியாவில் நடப்பு ஆண்டின் நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில், கச்சா எண்ணெய், 2486.01 டிஎம்டி உற்பத்தி செய்யப்பட்டது. இது இலக்கை விட 7.25 சதவீதமும், 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தை விட 4.91 சதவீதமும் குறைவாகும். 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 20426.50 டிஎம்டி ஆகும்.
இது இலக்கை விட 5.28 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தின் உற்பத்தியை விட இது 5.98 சதவீதம் குறைவாகும்.
இயற்கை எரிவாயு, 2020 நவம்பர் மாதத்தில் 2331.25 எம்எம்எஸ்சிஎம் உற்பத்தி செய்யப்பட்டது. இது மாத இலக்கை விட 20.56 சதவீதமும், 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தை விட 9.06 சதவீதமும் குறைவாகும். 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 18704.02 எம்எம்எஸ்சிஎம் ஆகும். இது இலக்கை விட 14.79 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தின் உற்பத்தியை விட இது 11.81 சதவீதம் குறைவாகும்.