இ20 எரிபொருளை பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தும் திட்டம்: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு

இ20 எரிபொருளை பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தும் திட்டம்: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு
Updated on
1 min read

E20 எரிபொருளை பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்துவது குறித்த பொதுமக்களின் கருத்துகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது.

பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து, வாகன எரிபொருளாக அதைப் பயன்படுத்துவதே E20 என்று அழைக்கப்படுகிறது.

E20 எரிபொருளுக்கு உகந்த வாகனங்களை உற்பத்தி செய்வதற்கும் இந்த அறிவிப்பு வழிவகை செய்கிறது. மாசைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், எண்ணெய் இறக்குமதிச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இது உதவும்.

இதன் மூலம் அந்நியச் செலாவணி மிச்சமாகும், அதோடு நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பும் வலுவடையும்.

E20 எரிபொருளை பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்துவது குறித்த பொதுமக்களின் கருத்துகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in