

சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு வரிச்சலுகை கொடுக்கப்பட வேண்டும் என்று பங்குவிலக்கல் துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது. பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குவிலக்கலுக்கு இந்த துறை திட்டமிட்டு வருகிறது.
இந்த வரிச்சலுகை குறித்து முறையான பரிந்துரையை நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பபட் டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். “சிறுமுதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது, இந்திய பங்குச் சந்தையின் பலம் அதிகரிக்கும். சிறுமுதலீட்டாளர்கள் பங்குச் சந்தைக்கு வரவேண்டும் என்றால் அவர்களுக்கு ஏதாவது ஒரு சலுகை கொடுத்தாக வேண்டும், குறிப்பாக வரிச்சலுகை கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது” என அந்த அதிகாரி தெரிவித்தார்.
பங்குவிலக்கல் துறை அமைச்சகம் சிறுமுதலீட்டா ளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது.