

5 டிரில்லியன் டாலர் இலக்கை 2025-க்குள் எட்டுவதற்கு தொழில் துறையும் அரசும் கைகோர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வர்த்தக சபையின் வருடாந்திர கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.
ஐந்து டிரில்லியன் டாலர் என்னும் பொருளாதார இலக்கை 2025-க்குள் எட்டுவதற்கு தொழில் துறையும் அரசும் கைகோர்க்க வேண்டும் என்று பியூஷ் கோயல் அப்போது கூறினார்.
கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகளைக் கடந்து வருவதற்கு இந்திய வர்த்தக சபை ஆற்றிய முக்கிய பங்கை கோயல் பாராட்டினார்.