

இந்திய அரசு செயல்படுத்திவரும் டிஜிட்டல் இந்தியாமயமாதலில் பொதிந்துள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறும்போது, “இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேலான மக்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் வளர்ச்சி ஆண்டுக்கு 4 சதவீதம் வரை உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் முன்னணி டிஜிட்டல் கலாச்சாரம் கொண்ட நாடாக இந்தியா விளங்கும் என்று கூறலாம். இதனால் ஃபேஸ்புக் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரும் தொழில் வாய்ப்பு காத்திருக்கிறது.
இதன் மூலம் இந்தியர்களின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு தற்போது உள்ள 1800- 2000 டாலர் என்ற நிலையிலிருந்து 5 ஆயிரம் டாலருக்கு உயரும் என எதிர்பார்க்கலாம்” என்றார்.