Published : 15 Dec 2020 07:28 AM
Last Updated : 15 Dec 2020 07:28 AM

இந்தியாவில் பொது சுகாதாரக் கண்காணிப்பு : 2035ம் ஆண்டுக்கான தொலைநோக்கு: நிதி ஆயோக் வெளியீடு

இந்தியாவில் பொது சுகாதாரக் கண்காணிப்பு பற்றிய 2035ம் ஆண்டுக்கான தொலைநோக்கை வெள்ளை அறிக்கையாக நிதி ஆயோக் வெளியிட்டது.

இந்தியாவின் பொது சுகாதாரக் கண்காணிப்பு முறை, மிகவும் பயனளிக்க கூடியதாகவும், முன்கூட்டிய கணிக்கக் கூடியதாகவும், அனைத்து மட்டங்களிலும் நடவடிக்கைக்கான தயார் நிலையை மேம்படுத்துவதாகவும் மாற்றுவதற்கு இந்த தொலைநோக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு ஆதரவான பொது சுகாதாரக் கண்காணிப்பு அமைப்பு, தனிநபர் ரகசியம், மற்றும் நம்பகத்தன்மையை இது உறுதி செய்யும். மக்களின் கருத்துக்களை அறிந்து செயல்படும் விதத்தில் இது இருக்கும்.

நோய்களைக் கண்டறிவதற்கும், தடுப்பதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கும், மத்திய - மாநிலங்கள் இடையேயான தரவு பரிமாற்ற முறை மேம்படுத்தப்படும்.

பொது சுகாதார அவசரகால நிகழ்வுகளை நிர்வகிப்பதில், பிராந்திய மற்றும் உலகளாவிய தலைமையை வழங்குவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த வெள்ளை அறிக்கையை நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், உறுப்பினர் டாக்டர் வினோத் கே பால், தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் சர்வால் ஆகியோர் வெளியிட்டனர்.

‘தொலை நோக்கு 2035: இந்தியாவில் பொது சுகாதாரக் கண்காணிப்பு என்பது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தும் பணியின் தொடர்ச்சியாகும். தனிப்பட்ட மின்னணு சுகாதாரப் பதிவுகளை கண்காணிப்பதற்கான அடிப்படையை இது பரிந்துரைக்கிறது. பொது சுகாதார கண்காணிப்பு என்பது ஒரு முக்கியமான செயல்பாடாகும். கண்காணிப்பு என்பது ‘செயலுக்கான தகவல்’.

மனித-விலங்கு இடையேயான தொடர்பு அதிகரிப்பால், அதிகரித்துவரும் நோய்களை மறுபரிசீலனை செய்ய, கோவிட் -19 தொற்றுநோய் நமக்கு வாய்ப்பளித்துள்ளது. நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், தொற்றுப் பரவலை தடுக்கவும், மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் மிக முக்கியம். இந்த தொலைநோக்கு, மக்களுக்கு ஆதரவான, பொது சுகாதார முறையை உருவாக்குகிறது. இது தனிநபர் ரகசியத்தையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், மூன்று அடுக்கு பொது சுகாதார அமைப்பை ஒருங்கிணைப்பதன் மூலம், பொது சுகாதார கண்காணிப்புக்கான இந்தியாவின் தொலைநோக்கு 2035-ஐ இந்த வெள்ளை அறிக்கை முன்வைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x