

இந்தியா 7.5 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை எட்டும் என்று மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலர் சக்திகாந்த தாஸ் உறுதிபடக் கூறியுள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் விளக்கிய அவர், ரிசர்வ் வங்கி சமீபத்தில் வட்டிக் குறைப்பு நடவடிக் கையை எடுத்துள்ளது. இதன் மூலம் வீட்டு வசதித்துறை உள்ளிட்ட பிற துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. இருந் தாலும் பொதுத்துறை வங்கிகளை வட்டியைக் குறைக்கும்படி அரசு கேட்டுக் கொள்ளாது. ஏனெனில் அவை சுதந்திரமாக செயல்படும் அமைப்புகள் என்றார். இருப்பினும் வட்டி குறைப்பு நடவடிக்கை தொடர்பாக பல்வேறு மாறுதல்களை அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் செயல்பாடு விரைவில் வகுக்கப்படும் என்று சக்தி காந்த தாஸ் மேலும் கூறினார். இந்த குழுதான் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் என்றும் அவர் கூறினார். இது தவிர பொதுக் கடன் நிர்வாக அமைப்பு (பிடிஎம்ஏ) அடுத்த இரு வாரங்களில் அமைப்பதில் உறுதியாக உள்ளதாக அவர் கூறினார்.
நிதிக் கொள்கை குழுவில் நிதி அமைச்சக பிரதிநிதிகளும், ரிசர்வ் வங்கி பிரதிநிதிகளும் இடம்பெறுவர் என்றார் அவர். இக்குழு அமைப்பதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.
பிடிஎம்ஏ அமைப்பது தொடர் பான சுற்றறிக்கை அமைச் சகங்களிடையே சுற்றுக்கு அனுப் பப்பட்டுள்ளது, இது தொடர்பான ஆலோசனைகள் விரைவில் கிடைக்கும். அதன் பிறகு இந்த விஷயத்தில் அரசு உறுதியான முடிவை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
அரசு கடன் பெறும் திட்டங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால ஏற்பாடாக பிடிஎம்ஏ உருவாக்க திட்டமிட்டுள்ளது. பின்னர் இது சுயேச்சையான அமைப்பாக ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
தற்போது அரசு கடன் பெறும் நிதிகளை ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது. இதற்கென தனியான சுதந்திரமான அமைப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது உருவாக்கப்பட வேண்டுமென்றால் ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட வேண்டும். ரிசர்வ் வங்கி சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட பிறகு முழுமையான பிடிஎம்ஏ உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றார்.
நிதிப் பற்றாக்குறை
நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாக நிதித்துறையின் செயலர் ரத்தன் வாட்டாள் கூறினார். பட்ஜெட்டில் குறிப்பிட்டபடி நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை குறைவாக இருக்கும் என்றார்.
இந்தியாவின் பேரியல் பொருளா தாரத்தின் அடிப்படை மிகவும் வலுவாக உள்ளது. இதனால் நடப்பு நிதி ஆண்டில் 7-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டாலும் அதனால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்காது என்று சுட்டிக் காட்டினார்.
நடப்பு நிதி ஆண்டில் நேரடி வரி வருமானம் செப்டம்பர் வரையான காலத்தில் முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாக வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். மறைமுக வரியைப் பொறுத்தமட்டில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 36 சதவீதம் கூடுதலாக வந்துள்ளதாக அவர் கூறினார்.
வரி வருவாய் அதிகரித்திருப் பதிலிருந்தே நாட்டின் பொருளா தாரம் வளர்ச்சியடைவதை உணர முடியும் என்று சுட்டிக் காட்டினார்.
பட்ஜெட்டில் அரசு நிர்ணயித் திருந்த வருவாய் குறித்த கணக்கு விவரங்கள் சாத்தியமில்லாதவை என முன்னர் கூறப்பட்டது.
ஆனால் வரி வருமான விவரங் களை பார்க்கும்போது அது சாத்தி யமானதுதான் என்பது புலனாகி யுள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிர மணியன் கூறினார்.