பங்கு விற்பனை மூலம் ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட ஹெச்டிஎப்சி வங்கி முடிவு

பங்கு விற்பனை மூலம் ரூ.10 ஆயிரம் கோடி திரட்ட ஹெச்டிஎப்சி வங்கி முடிவு
Updated on
1 min read

தனியார்துறை வங்கியான ஹெச்டிஎப்சி பங்கு விற்பனை மூலம் ரூ. 10 ஆயிரம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இத்தொகையை வங்கியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்குதாரர்களிடம் இதற்கு ஒப்புதல் பெறுவதென முடிவு செய்யப்பட்டதாக மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.

பொதுப்பங்கு வெளியிடுவது அல்லது தனியாருக்கு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவை மூலம் நிதி திரட்ட அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டது. உள்நாட்டில் மட்டு மின்றி தேவைப்பட்டால் வெளிநாடு களிலிருந்தும் இத்தொகையை திரட்டிக் கொள்ள அனுமதிப்பதென இயக்குநர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வங்கியின் தற் போதைய சந்தை மதிப்பு ரூ. 1.96 லட்சம் கோடியாகும். வங்கியின் மூலதனத்தை அதிகரிக்கும் நட வடிக்கைக்கு செபி விதிமுறைகள் மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் பட்சத்தில் பங்கு வெளியீட்டை மேற்கொள்வதென முடிவு செய்யப் பட்டது.

பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்த ஓராண்டு காலத்திற்குள் இத் தொகை திரட்டப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in