10 லட்சம் பவுண்ட் இழப்பீடு கேட்டு விப்ரோ நிறுவனம் மீது பெண் ஊழியர் வழக்கு

10 லட்சம் பவுண்ட் இழப்பீடு கேட்டு விப்ரோ நிறுவனம் மீது பெண் ஊழியர் வழக்கு
Updated on
1 min read

இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மீது அதன் முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் 10 லட்சம் பவுண்ட் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாலியல் ரீதியான மன உளைச்சல், ஊதிய ஏற்றத்தாழ்வு கள் மற்றும் நியாயமில்லாத பணிநீக்கம் போன்ற காரணங் களால் இந்த வழக்கை அவர் தொடர்ந்துள்ளார்.

ஸ்ரேயா உகில் என்கிற அந்த பெண் பணியாளர் விப்ரோவின் லண்டன் அலுவலகத்தில் பணி யாற்றியவர். இவர் நிறுவனத் தின் மீது வைத்துள்ள குற்றச் சாட்டுகளில் முக்கியமாக நிறுவனம் பெண் பணியாளர்களை கடுமையாக சுரண்டுகிறது என்றும், நிறுவனத்தில் பெண் பணியாளர்களை மோசமாக நடத்தும் கலாச்சாரம் நிலவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விப்ரோவில் பாலியல் ரீதியான பாகுபாடுகள், ஆண் பெண் பணியாளர்களுக்கு வேறு பாடான ஊதிய முறை, பாலியல் ரீதியான தொந்தரவுகள் உள்ளதாக கூறியுள்ளார். விப்ரோ பெண் பணியாளர்களை இரண்டாம் நிலை பணியாளர்களாகவே பார்க்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

லண்டன் வேலைவாய்ப்பு தொழில் குறைதீர்ப்பு மையத் தில் இந்த வழக்கை அவர் தொடர்ந்துள்ளார். மேலும் நிறுவ னத்தின் முன்னாள் முதன்மை துணைத் தலைவர் மற்றும் சர்வ தேச பிபிஓ தலைவராக இருந்த மனோஜ் புஞ்சா மோசடியாக திருமணம் செய்த விவகாரம் குறித்தும் குற்றம் சாட்டியுள்ளார்.

மனோஜ் புஞ்சா விப்ரோ நிறுவனத்திலிருந்து வெளியேறி தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோலேண்ட் நிறுவனத்தில் செயல் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக விப்ரோ நிறுவனத்தின் பிபிஓ பிரிவின் முதன்மை துணைத் தலைவர் மற்றும் செயல் அதிகாரியாக பணியாற்றினார்.

குற்றச்சாட்டை எழுப்பியுள்ள உகில் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தை மேம்பாடு பிரிவின் மேலாளராக பணியாற்றியவர். குற்றச்சாட்டுகளை குறித்து மேலும் கூறியவர் பெண்களை மோசமான பண்டமாக நடத்தினார் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விப்ரோ தற்போது நிலுவையிலுள்ள இந்த வழக்கு குறித்து கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துள்ளது. மேலும் பணியாளர்கள் விருப்ப தேவைகள் குறித்த மோதல்கள், தனிப்பட்ட உறவுகள் சார்ந்த மோதல்களை நிறுவனத்தில் வெளிப்படுத்தக் கூடாது என்பதுதான் விப்ரோவின் கொள்கையாக உள்ளது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

தனிப்பட்ட முறையில் இதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் நிறுவனப் பணியிலிருந்து இந்த இரண்டு பேரும் விலகிவிட்டனர் என்றும், இந்த குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டதாக சந்தேகிக்கிறோம் என்றும் விப்ரோ கூறியுள்ளது. மேலும் நிறுவனத்தின் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in