

நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் கடந்த 8ம் தேதி வரை 356.18 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்தைவிட 20.41 சதவீதம் அதிகம்.
காரீப் நெல் கொள்முதல் தமிழகம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் சுமுகமாக நடக்கிறது. கடந்த 8ம் தேதி வரை 356.18 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 37.38 லட்சம் விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.67248.22 கோடி பெற்றுள்ளனர்.
மாநிலங்களின் வேண்டுகோள் படி 48.11 லட்சம் மெட்ரிக் டன் பருப்பும், எண்ணெய் வித்துக்களும் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடந்த 8ம் தேதி வரை 143425.38 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகியவற்றை, 81,301 விவசாயிகளிடமிருந்து ரூ.770.84 கோடிக்கு அரசு கொள்முதல் செய்துள்ளது.
கடந்த 8ம் தேதி வரை 41,52,628 பருத்திக் கட்டுகளை, 8,05,262 விவசாயிகளிடமிருந்து ரூ.12,150.84 கோடிக்கு அரசு கொள்முதல் செய்துள்ளது.