Published : 10 Dec 2020 07:39 AM
Last Updated : 10 Dec 2020 07:39 AM

8,397 கன்டெய்னர்களை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

எம்.வி. ஏபிஎல் இங்கிலாந்து என்ற சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்தின் 2வது முனையத்துக்கு வந்தது.

இங்கு சரக்குகளை கையாளும் சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் என்ற நிறுவனம் கடந்த 4ம் தேதி, 8,397 கன்டெய்னர்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது.

இவற்றில் 4276 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன, 4121 கன்டெய்னர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த கப்பல் கடந்த 8ம் தேதி புறப்பட்டு சென்றது. இதற்கு முன் எச்.எஸ் எவரெஸ்ட் நிறுவனம் கடந்த 8.3.2016ம் தேதி 7209 கன்டெய்னர்களை கையாண்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனைக்காக சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் நிறுவனத்தையும், சென்னை துறைமுக அதிகாரிகளையும், சென்னை துறைமுக கழகத் தலைவர் பி.ரவீந்திரன் பாராட்டினார்.

சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x