Published : 09 Dec 2020 04:59 PM
Last Updated : 09 Dec 2020 04:59 PM

அஞ்சலக சேமிப்பு கணக்கு : குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்த கடைசி நாள் டிசம்பர் 11-ம் தேதி

அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக வரும், இன்னும் இரண்டு நாட்களுக்குள், அதாவது டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை நகர தெற்கு பிரிவின் அஞ்சலக மூத்த கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கி சேவையில் இறங்கிய அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50ஆக இருந்தது. இதை ரூ.500ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த விதிமுறை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஏற்கனவே, சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்திக் கொள்ள வரும் இம்மாதம் (டிசம்பர்) 11 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத பட்சத்தில் மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100, ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத் தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும்.

எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக வரும் டிசம்பர் 11- ம் தேதிக்குள் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை நகர தெற்குப் பிரிவின் அஞ்சலக மூத்த கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x