

நடப்பு காரீப் சந்தை பருவத்தில், கடந்த 7ம் தேதி வரை, 350.29 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 36.13 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.66135.01 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு காரீப் சந்தை பருவத்தில், உணவு தானியங்களை அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. தமிழகம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் நெல் கொள்முதல் சுமுகமாக நடக்கிறது. கடந்த 7ம் தேதி வரை 350.29 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்கள் வேண்டுகோள்படி தமிழகம், கர்நாடகம் உட்பட பல மாநிலங்களில் 48.11 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு, எண்ணெய் வித்துக்களை ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 7ம் தேதி வரை 1,39,458.85 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக்கடலை, சோயா பீன்ஸ் ஆகியவற்றை 79,201 விவசாயிகளிடமிருந்து ரூ.749.85 கோடிக்கு அரசு கொள்முதல் செய்துள்ளது.