

பணியாளர்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான முக்கிய நடவடிக்கைகளை தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் எடுத்துள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) சந்தோஷ் குமார் கங்க்வார் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் 183-வது கூட்டத்தில், பணியாளர்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மாநில அரசுகள் நிர்பந்தித்தால் தவிர அனைத்து புதிய மருத்துவமனைகளையும், எதிர்காலத்தில் கட்டப்படும் ஈஎஸ்ஐ மருத்துவமனைகளையும்,
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகமே நடத்தும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பத்து கிலோமீட்டர் சுற்றளவில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவமனையோ, சிகிச்சை மையமோ இல்லாத பட்சத்தில், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு பெற்ற மருத்துவமனைகளில் நேரடியாக வெளி நோயாளி சேவைகளை பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம்.
டெல்லி/தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு பிரிவுகள் மற்றும் சேவைகள் படிப்படியாக நாடு முழுவதும் நீட்டிக்கப்படும்.