

மாகி நூடுல்ஸ் பாதுகாப்பானவை என்று புதிதாக செய்யப்பட்ட சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. பாம்பே உயர்நீதிமன்றம் இந்த சோதனைகளுக்கு உத்தர விட்டிருந்தது.
கடந்த ஜூன் மாதம் நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மாகி நூடுல் ஸில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக அளவில் நச்சுத்தன்மை இருந்ததால் இதற்கு தடைவிதிக்கப் பட்டது.
இதனை மீண்டும் சோதனை நடத்த பாம்பே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நிறுவனத்தின் 6 வகை நூடுல்ஸ்களில் இருந்து 90 சாம்பிள் எடுத்து மூன்று ஆய்வு மையங்களில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனை முடிவுகளில் இவை சாப்பிட உகந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி உற்பத்தியை தொடங்கப் போவதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. புதிதாக நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு, எந்தெந்த ஆய்வு மையங்களில் சோதனை செய்யப்பட்டது என்ற தகவலும் அச்சிடப்படும் என்று நெஸ்லே தெரிவித்திருக்கிறது.
முன்னதாக இந்த வருடத்தின் இறுதிக்குள் மாகி நூடுல்ஸை விற்பனைக்கு கொண்டுவருவோம் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கூறியிருந்தார்.
இதுதவிர, தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்யப்பட்ட சோதனை முடிவுகளும் சாதகமாக வந்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் பாதுகாப்பானவை என்று கூறியிருப்பதாக நெஸ்லே தெரிவித்திருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் மாகி நூடுல்ஸ் தடைசெய்யப்பட்ட போது 6.7 கோடி டாலர் அளவுக்கு நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது.
நெஸ்லே நிறுவனத்துக்கு தடை நீங்கியதால் நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 5.85 சதவீதம் உயர்ந்து 6,569.40 ரூபாயில் முடிவடைந்தது.
நெஸ்லே இந்தியா நிறுவனத் தின் மொத்த வருமானத்தில் மாகி நூடுல்ஸ் மூலமான வருமானம் 30 சதவீதமாகும்.