

இந்தியாவில் வெங்காயத்தின் விலை சராசரியாக கிலோ 60 ரூபாய் என்ற அளவிலே தொடர்ந்து விற்பனையாகி வருகிறது. இதனால் வெங்காயத்தின் விலையைக் குறைப்பதற்காக கடந்த இரு மாதங்களில் 18,000 டன் அளவுக்கு எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கும் சிகப்பு நிறத்திலான வெங்காயங்கள் இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 18,000 டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதே அளவு வெங்காயம் இந்தியாவுக்கு வர காத்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 567 டன் அளவுக்கு மட்டுமே எகிப்திலிருந்து வெங்காயம் இந்தியாவுக்கு வந்தது. ஆனால் இந்த நிதி ஆண்டில் சுமார் 35,000 டன் வரை இறக்குமதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்காயம் உற்பத்தியாகும் மாநிலங்களில் மழை அளவு அதிக மாக இருந்ததன் காரணமாக பயிர் கள் சேதம் அடைந்தன. தவிர வெங் காய விற்பனையாளர்களும் பதுக்கி வைத்ததால் வெங்காயத்தின் விலை அதிகரித்தது. எகிப்து மட்டு மல்லாமல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. எகிப்தில் இருந்து ஆரஞ்சு பழங்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.