கடந்த 12 நாட்களில் டீசல் விலை ரூ.2.61 அதிகரிப்பு: பெட்ரோல் விலை தொடர்ந்து இரு வாரங்களாக உயர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கடந்த 12 நாட்களில் டீசல் விலை ரூ.2.61 அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.1.80 அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 14 நாட்களில் 12-வது முறையாக உயர்த்தியுள்ளன.

பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 20 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 23 பைசாவும் அதிகரித்துள்ளது. இதன்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.86க்கும், டீசல் ரூ.73.07க்கும் விற்பனையாகிறது.

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.89.52க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.79.66க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.85.86க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.78.54க்கும் விற்பனையாகிறது.

கடந்த நவம்பர் 20-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 12-வது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.61 அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதிக்குப் பின் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது, அதேபோல டீசல் விலையில் அக்டோபர் 2-ம் தேதிக்குப் பின் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் கடந்த 12 நாட்களாகத் தொடர்ந்து விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in