

தற்போதைய காரீப் சந்தை காலத்தில், நவம்பர் 30ம் தேதி வரை 318 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலத்தை விட 18.58 சதவீதம் அதிகம்.
தமிழகம், பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் காரீப் நெல் கொள்முதல் சுமூகமாக நடக்கிறது. நவம்பர் 30ம் தேதி வரை 318 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 268.15 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
இதற்காக 29.70 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.60038.68 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்கள் விருப்பத்தின் அடிப்படையில், 45.24 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.