Published : 02 Dec 2020 02:40 PM
Last Updated : 02 Dec 2020 02:40 PM

எக்ஸ் பி 100; புதிய வகை பெட்ரோல் அறிமுகம்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

புதிய வகை பெட்ரோல் அறிமுகம், மக்களின் வாழ்வை எளிதாக்குவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இந்தியாவின் பெட்ரோலிய எரிபொருள் சில்லரை வர்த்தக சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடிய நடவடிக்கையாக, ஆக்டேன் 100 என்னும் புதிய வகை பெட்ரோல் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

எக்ஸ் பி 100 என்று அழைக்கப்படும் இந்த பெட்ரோல், உலகத்தரம் வாய்ந்த உயர்தர எரிபொருளாக விளங்கும். இந்த பெட்ரோலை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அறிமுகப்படுத்தினார்.

நாட்டில் உள்ள 10 மாநகரங்களில் இப்பெட்ரோலை அறிமுகப்படுத்திய பிரதான், மக்களின் வாழ்வை எளிதாக்குவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்தார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் தருண் கபூர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியா மற்றும் இதர உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

எக்ஸ் பி 100 என்னும் உலகத்தரம் வாய்ந்த உயர்தர எரிபொருளின் தொழில்நுட்பம், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது என்றும் இது மிகவும் பெருமை அளிக்கும் விஷயம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x