

இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப சேவைகளை வழங்கி வரும் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான இன்போசிஸ் இந்த வருடம் 20,000 பேரை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கவுள்ளது.
கடந்த வருடம் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய அளவி லேயே இவர்களுக்கும் வழங்க இருப்பதாக நிறுவனம் கூறி யுள்ளது.
இதன்படி இவர்களுக்கு ஆண் டுக்கு ரூ.3.25 லட்சம் ஊதியமாக வழங்க உள்ளது.
மேலும் நிறுவனத்தில் பயிற்சி பெற வருபவர்களுக்கு உதவித் தொகையை ரூ.1000 த்திலிருந்து ரூ.4000 மாக உயர்த்தியிருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் பலர் கார்ப்பரேட் உலகத்துக்குள் நுழையவும், நிறையக் கற்றுக் கொள்ளவும் தயாராக இருக் கிறார்கள். புதிதாக வருபவர்கள் எங்களோடு இணைந்த பிறகு நிறைய மாற்றத்தை உணரு கிறார்கள் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீண் ராவ் கூறியுள்ளார்.
புதிதாக வேலைக்கு சேர்பவர் களுக்கு வேலையை பற்றிய புரிதல், செயல்திட்டம், பயிற்சி முறை போன்றவற்றை பற்றி சுமார் ஆறு மாதங்கள் வரை பயிற்சிகள் கொடுக்கிறோம். அதன் பிறகுதான் புதிதாக சேர்ந்த வர்கள் வேலையைப் பற்றி புரிந்து கொள்கிறார்கள். ஆண்டு வாரியாக கணக்கிடுகிறபோது வேலை மாறுபவர்கள் விகிதம் 14.1 சதவீதமாக குறைந்துள்ளது.
இது அதற்கு முந்தைய காலாண்டில் 14.2 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டில் வேலை மாறுபவர்கள் விகிதம் 21.1 சதவீதமாக இருந்தது என்றும் இன்போசிஸ் கூறியுள்ளது.