Last Updated : 14 Oct, 2015 10:36 AM

 

Published : 14 Oct 2015 10:36 AM
Last Updated : 14 Oct 2015 10:36 AM

இந்தியாவில் கூகுள் நெக்ஸஸ் போன் அறிமுகம்

கூகுள் நிறுவனம் தனது புதிய ரக நெக்ஸஸ் போன்களான 6பி மற்றும் 5எக்ஸ் ஸ்மார்ட்போன்களை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 21-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெக்ஸஸ் 5எக்ஸ் மற்றும் 6பி ஆண்ட்ராய்டு ‘மார்ஷ்மல்லோவ் 6.0’ செயலியை கொண்டது. 16 ஜிபி நினைவகத்தை கொண்ட நெக்ஸஸ் 5எக்ஸ் விலை 31,900 ரூபாயாகும்.

32 ஜிபி நினைவகம் கொண்ட நெக்ஸஸ் 5எக்ஸ் விலை ரூ.35,900. அதே போல் 16 ஜிபி நினைவகம் கொண்ட நெக்ஸஸ் 6பி விலை 39,999 ரூபாயாகும். 32 ஜிபி நினைவகம் கொண்ட நெக்ஸஸ் 6பி விலை ரூ.42,999. இந்த ஸ்மார்ட்போன்களை இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மூலம் மட்டுமே வாங்கமுடியும்.

கூகுள் நெக்ஸஸ் 5எக்ஸ் ஸ்மார்ட்போனை எல்ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. 5.2 அங்குல டிஸ்பிளே, லேசர் உதவியுடன் ஆட்டோபோகஸ் செய்யும் 12.3 மெகாபிக்ஸல் பின்பக்க கேமராவையும் 5 மெகாபிக்ஸல் முன்பக்க கேமராவையும் கொண் டுள்ளது. மேலும் 2 ஜிபி ராமுடன் குவாட்காம் ஸ்நாப்டிராகன் 808 எஸ்ஓசி பிராசஸர் கொண்டு வடிமைக்கப்பட்டிருக்கிறது

கூகுள் நெக்ஸஸ் 6பி ஸ்மார்ட் போனை ஹுவாய் நிறுவனம் தயாரித்துள்ளது.

நெக்ஸஸ் 6பி முதன்முதலில் முழுவதும் உலோக வெளிப் பகுதியை கொண்டு தயாரிக் கப்பட்ட முதல் ஸ்மார்ட் போனாகும். இது 5.7 அங்குல டிஸ்பிளே கொண்டது.

மேலும் 3 ஜிபி ராம், 12.3 மெகாபிக்ஸல் பின்பக்க கேமராவையும், ஹெச்டிஆர் வகையில் படம் பிடிக்கக்கூடிய 8 மெகாபிக்ஸல் முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது.

3 ஜிபி ராம் மற்றும் ஸ்நாப் டிராகன் 810 வெர்சன் 2.1 எஸ்ஓசி பிராசஸர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x