Last Updated : 27 Oct, 2015 09:53 AM

 

Published : 27 Oct 2015 09:53 AM
Last Updated : 27 Oct 2015 09:53 AM

ஆன்லைன் மூலம் சிமென்ட் விற்பனை: ரிலையன்ஸ் தொடக்கம்

ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரெக்சர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் சிமென்ட் நிறுவனம் ஆன்லைன் மூலம் சிமென்ட் விற்பனையை 3 மாநிலங்களில் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்க ளுக்கு வசதியான நேரத்தில் சிமென்டை வாங்குவதற்கு வசதி யாக இணையதளம் மூலமாக சிமென்ட் விற்பனையைத் தொடங் கியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித் துள்ளது.

முதல் கட்டமாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரி விக்கிறது.

ஆன்லைன் மூலம் குறைந்த பட்சம் 25 மூட்டைகள் ஆர்டர் செய்ய வேண்டும். இது 48 மணி நேரத்தில் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 4 ஆலைகளின் ஒட்டுமொத்த சிமென்ட் உற்பத்தி 1.5 கோடி டன்னாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x