

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் $28.1 பில்லியன் நேரடி அந்நிய முதலீடு நாட்டுக்குள் வந்தது.
2020-21-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) $28,102 மில்லியன் நேரடி அந்நிய முதலீடு நாட்டுக்குள் வந்துள்ளது.
இதில் நேரடி அந்நிய பங்கு முதலீடுகளின் மதிப்பு, $23,441 மில்லியன், அதாவது ரூபாய் 174,793 கோடி ஆகும். இதன் மூலம் 2020-21-ம் நிதியாண்டில் செப்டம்பர் வரை இந்தியாவில் செய்யப்பட்ட நேரடி அந்நிய முதலீட்டின் மதிப்பு $30,004 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 15 சதவீதம் அதிகமாகும்.
இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கும்போது இது ரூபாய் 224,613 கோடியாகவும் கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 23 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.