

ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரியான ஜாக் டோர்சே தன்வசம் உள்ள மூன்றில் ஒரு சதவீத பங்குகளை பணியாளர்களுக்கு கொடுத்திருக்கிறார். சுமார் 70 கோடி பங்குகள் பணியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பங்குகளின் மதிப்பு 20 கோடி டாலர் ஆகும். இந்தத் தகவலை அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் 1.5 கோடி பங்குகள் டோர்சே வசம் உள்ளன. அந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு 46 கோடி டாலர்கள் ஆகும்.
ஒரு வாரத்துக்கு முன்பு 8 சதவீத ட்விட்டர் பணியாளர்கள் நீக்கப்பட்டார்கள். இதன் காரணமாக ஒன்பது வருட நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக லாபம் கிடைத்திருக்கிறது.
நான் நம்பிக்கையாக இருக்கிறேன். ட்விட்டர் இன்னும் பெரிய நிறுவனமாக வரும் என்றும் இந்தப் பங்குகள் அடுத்த வருடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ட்விட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் ட்விட்டர் பங்குகள் சுமார் 40 சதவீதம் அளவுக்கு சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 30 கோடி வாடிக்கையாளர்கள் ட்விட்டர் பயன்படுத்துகிறார்கள்.
ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஆரம்ப காலங்களில் டோர்சே இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் இயக்குநர் குழு சரியான தலைவர் அல்ல என்று சொல்லி நீக்கிவிட்டது.
தவிர டோர்சே ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தார். கடந்த இரு வருடங்களில் 1.5 கோடி பங்குகளை அந்த நிறுவனத்தின் பணியாளார்களுக்கு கொடுத்திருக்கிறார். இன்னமும் ஸ்கொயர் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை டோர்சே வைத்துள்ளார்.