Published : 28 Nov 2020 03:52 PM
Last Updated : 28 Nov 2020 03:52 PM

8 முக்கிய தொழில் துறையின் அக்டோபர் மாத உற்பத்தி நிலவரம்

புதுடெல்லி

எட்டு முக்கிய தொழிற்துறையின் 2020 அக்டோபர் மாத குறியீடுகளை தொழில் வளர்ச்சி துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

எட்டு கோடி தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த குறியீடு கடந்த அக்டோபர் மாதத்தில் 124.2 ஆக உள்ளது. இது கடந்தாண்டு இதேகால குறியீடை விட 2.5 சதவீதம் குறைவு.

எட்டு முக்கிய தொழில் நிறுவனங்களின் குறியீடுகளின் சுருக்கம்:

நிலக்கரி உற்பத்தி 2020ம் ஆண்டு அக்டோபரில், கடந்தாண்டு இதே காலத்தைவிட 11.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த அக்டோபரில், கடந்தாண்டு இதே காலத்தை விட 6.2 சதவீதம் குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி கடந்த அக்டோபரில் 8.6 சதவீதம் குறைந்துள்ளது.

பெட்ரோலிய சுத்திகரிப்பு தயாரிப்புகள் கடந்த அக்டோபரில் 17 சதவீதம் குறைந்துள்ளது.

உரங்கள் உற்பத்தி கடந்த அக்டோபர் மாதத்தில் 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

எஃகு உற்பத்தி கடந்த அக்டோபரில் 17.92 சதவீதம் குறைந்துள்ளது.

சிமென்ட் உற்பத்தி கடந்த அக்டோபரில் 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

மின்சார உற்பத்தி கடந்த அக்டோபரில் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x